Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ரயில்வே திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்”… ரயில் நிலையத்தில் பாமக ஆர்ப்பாட்டம்…!!!

ரயில்வே திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் விருதுநகர் ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் ரயில் நிலையத்திற்கு முன்பாக ரயில்வே திட்ட பணிகளை கூடிய விரைவில் செயல்படுத்த கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டமானது நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்முகவேல் சாமி, மத்திய மாவட்ட தொழிற்சங்க தலைவர் அமிர்தகண்ணன் மற்றும் மாநில பொருளாளர் திலகபாமா ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் தென் மாவட்ட ரயில்வே திட்ட பணிகளுக்கு உடனடியாக தேவைப்படும் நிதியை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள்.

Categories

Tech |