சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலால் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் இருக்கும் குமரன் தெருவில் வசித்து வருபவர் வனராஜ். இவருடைய மகனான பாரதிக்கு சித்திரை திருவிழாவின்போது இளைஞர்களுடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இளைஞர்கள் பாரதியை கல்லால் தலையில் அடித்துள்ளனர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது. இதுபற்றி பாரதி ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
பாரதி புகாரின் பெயரில் ராஜபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த செல்வகுமார், அமீர், பிரவீன், ஈஸ்வரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள். இதைப்போல புல்லு கடையை தெருவைச் சார்ந்த தங்கசாமி என்பவரை கீழே தள்ளியதால் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதால் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் தங்கசாமி காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் புள்ள கடைத் தெருவை சேர்ந்த நீராத்து லிங்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.