Categories
உலக செய்திகள்

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வாலிபர்…. மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…..!!!!!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 20 வயது வாலிபர் கடும் மார்பு வலியுடன் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நோயாளியின் முகம் வீங்கி இருப்பதை கவனித்த மருத்துவர்கள் அவர் சுவாசிக்கும் போது தனித்துவமான சத்தம் கேட்பதையும் கண்டறிந்தனர். மேலும் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு தீவிரமான மூச்சுத் திணறல் ஏற்பட்டு நுரையீரலில் காற்றறைகள் கிழியும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. செயற்கை சுவாசத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பிய பின், மேற்சிகிச்சைக்காக வாலிபரிடம் எவ்வாறு மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரித்தனர்.

இந்நிலையில் அவர் கூறிய காரணம் மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது 20 வயதான அந்த வாலிபருக்கு படுக்கையில் படுத்தபடி சுய இன்பம் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்பின் தான் வாலிபருக்கு “நிமோமெடியாஸ்டினம்” எனப்படும் ஒரு அரிய நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதிசெய்தனர். நுரையீரல் (அல்லது) உணவுக்குழாயில் ஏற்படும் உடலரீதியான அதிர்ச்சியால் நிமோமெடியாஸ்டினம் (pneumomediastinum) ஏற்படலாம். மார்பு குழிக்குள் அழுத்தம் திடீரென்று அதிகரிப்பதால் நுரையீரலிலுள்ள காற்றுப்பைகள் சேதமடைந்து அதிகளவு ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலை உருவாகும்.

இதுபோன்ற காயம் வாலிபருக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் கடும்  ஆஸ்துமா தாக்குதல், கடுமையான உடற்பயிற்சி (அல்லது) வாந்தி போன்றவை நிமோமெடியாஸ்டினம் ஏற்பட வழிவகுக்கும். இது குறித்து மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நிமோமெடியாஸ்டினத்தின் இந்நிகழ்வு அசாதாரணமானது என குறிப்பிட்டுள்ளனர். ஏனென்றால் இது சுயஇன்பத்தால் ஏற்பட்ட “நிமோமெடியாஸ்டினம்” இதற்கு முன்பு கேள்விப்படாத ஒன்றாகும். அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் விரைவாக குணமடைந்து 4 நாட்களுக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Categories

Tech |