Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்… வெளியான தகவல்…!!!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்திடம் தமிழக  அரசு உறுதி அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். சில மாநிலங்கள் பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. சில மாநிலங்களில்  அது பரிசீலனையில் இருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் அவர்களுக்கு  பிறகு குடும்பத்தினருக்கு மாதாந்திர ஓய்வூதியம், பணிக்கொடை போன்ற பயன்களும் அளிக்கப்பட்டுள்ளன.

ஆனால் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இந்த பயன்கள் நிறுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 2003ம் ஆண்டுக்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த பட்டிருக்கிறது. ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை பிடித்தம் செய்து பணி ஓய்வுக்குப் பிறகு வழங்கப்படும்  CPS Contributory Pension Scheme (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) எனும் புதிய ஓய்வூதியத்தில் பணிக்கொடை, ஓய்வூதியம்,  மருத்துவ காப்பீட்டு முதலிய  எந்த பலன்களும் பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்காது என அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பழைய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநில அரசுகள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து இருக்கின்றனர். மேலும் கேரளா, டெல்லி ,ஆந்திர மாநிலங்களின் அரசுகள் வல்லுனர் குழுவின் அறிக்கையை பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது குறித்தும் ஆராய தமிழ்நாடு அரசு சார்பில் வல்லுநர் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் வழங்கியிருக்கிறது. இந்த பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து உரிய முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும் எனவும்,  உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் அரசு ஊழியர் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |