வாலிபரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மடத்தூர் முருகேசன் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் வீட்டு முன்பு அதே பகுதியில் வசிக்கும் சுந்தரராஜன் என்பவர் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன் சுந்தரராஜனை சத்தம் போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரராஜன் மணிகண்டனை அங்கு கிடந்த கம்பால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மணிகண்டன் தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுந்தரராஜனை கைது செய்துள்ளனர்.