இலங்கை நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அதிபர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பதவி முடியும் வரை நான் பதவியில் இருப்பேன் என்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் மற்றும் முன்னாள் மந்திரிகளுக்கு இடையிலான சந்திப்பு நிறைவடைந்தது.
இலங்கை அதிபர் மாளிகையில் நடந்த இந்த கூட்டத்தின் முடிவில் இன்று மாலை புதிய அமைச்சரவை பொறுப்பேற்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்க் கட்சியினரை புதிய ஆட்சி அமைக்க அழைத்தும், அவர்கள் முன்வராததால் புதிய அமைச்சரவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.