முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள செம்மிபாளையம் பகுதியில் திருமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டதால் திருமூர்த்தி தனது மகன் கந்தசாமி வீட்டின் அருகில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக திருமூர்த்திக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனது. இதனால் திருமூர்த்தி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது மகன் கந்தசாமி திருமூர்த்திக்கு உணவு கொடுப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது வீட்டு வாசலில் திருமூர்த்தி வாயில் நுரை தள்ளியபடி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் திருமூர்த்தியை உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு திருமூர்த்தியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் திருமூர்த்தி விஷம் குடித்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.