வடகொரியா நாட்டில் கிம் இல் சுங்கின் 110வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வடகொரியா நாட்டில் பியாங்யாங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கிம் இல் சுங்கின் 110வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதாவது வடகொரியாவின் நிறுவனர் தற்போதைய ஆட்சி முறைக்கு வழி வகுத்த கிம் இல் சுங்கின் பிறந்த தினத்தை தேசிய விடுமுறையாக அறிவித்தும் சூரியனின் தினம் என்றும் கொண்டாடி வருகின்றனர்.
அவரது 110வது பிறந்த நாளையொட்டி பியாங்யாங்கில் கிம் இல் சுங் சதுக்கத்தில் நேற்று மாலை பிரம்மாண்ட பேரணி நடைபெற்றுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள கண்கவர் நிகழ்ச்சியை கிம் இல் சுங்கின் பேரனும் தற்போதைய அதிபரான கிம் ஜோங் உன் மற்றும் அவரது சகோதரியான கிம் யோ ஜோங் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.