Categories
உலக செய்திகள்

ரெண்டு வருஷமா நடக்கல…. ஈஸ்டர் பண்டிகைக்கு அனுமதியளித்ததால்…. மெக்சிகோ மக்கள் உற்சாகம்….!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஈஸ்டர் பண்டிகையை மெக்சிகோ நாட்டு மக்கள் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர். 

மெக்சிகோ நாட்டில் இஸ்தபலபா என்ற நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் இயேசு கிறிஸ்துவின் இறுதி நாளன்று அவரை சிலுவையில் அறைந்து ஊர்வலமாக அழைத்துச் செல்வதை வீதி நாடகமாக நடித்துக் காட்டும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்களுக்கு  இந்நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த சிலுவைப்பாதை ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர்  மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |