Categories
தேசிய செய்திகள்

GST வரி விகிதங்களில் மாற்றம்…? வெளியான புதிய தகவல்…!!!!

ஜிஎஸ்டி நடைமுறையில் 5% என்கிற வரிஅளவை நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 5%, 12%, 18%,28%ஆகிய சதவீத அளவுகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. தங்க நகைகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும் 3% வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் 5% சதவிதம் வரி பிரிவில் வரும் பொருட்களில் சிலவற்றை அடுத்துள்ள 8 விழுக்காடு வரி பிரிவிற்கும் மற்றவற்றை 3 பிரிவு விழுக்காடு பிரிவிற்கும் மாற்றிவிட ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர 5 விழுக்காடு பிரிவை 7 , 8 அல்லது 9 விழுக்காடாக உயர்த்தலாம் என்று ஜிஎஸ்டி கவுன்சில் யோசிச்சுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி ஒவ்வொரு சதவிதம் உயர்த்தும் போது அரசுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது அடுத்த மாத மத்தியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு வெளியாகும் என தெரியவந்தது.

Categories

Tech |