Categories
தேசிய செய்திகள்

அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 5 வாரங்களில் 2,850 கோடி டாலராக குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தங்கம் கையிருப்பின் மதிப்பும் 21.5 கோடி டாலர் குறைந்து 4,251 கோடி டாலராகவும், கச்சா எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க ஆர்பிஐ கருவூலத்திலிருந்து டாலரை விற்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த செப்டம்பரில் எப்போதும் இல்லாத அளவிற்கு 64,245 கோடி டாலரைத் தொட்டிருக்கிறது.  இதனிடையில் பெட்ரோலியப் பொருட்களுக்கான அதிகமான இறக்குமதி பில்களுக்கு மத்தியில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்திய ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுப்பதற்கு டாலரை விற்பனை செய்வதாகத் தெரிகிறது.

Categories

Tech |