சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டியில் நேதாஜி என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக நாமக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நேதாஜி போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபரை தேடி வருகின்றனர்.