தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது. சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது சேதமடைந்த பெரியார் சிலையை சீரமைக்கும் பணி தீவிரமாக போலீசார் பாதுகாப்பில் நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பெரியார் சிலையை உடைத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே கலியப்பேட்டை எனுமிடத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இத்தகைய செயலை யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தமிழ்நாட்டில், சமூக அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் சமீப காலமாக அரங்கேறி வரும் இத்தகைய நிகழ்வுகளை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது என்றும் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில், சமூக அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் சமீப காலமாக அரங்கேறி வரும் இத்தகைய நிகழ்வுகளை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 24, 2020