ஆண்டுதோறும் ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடைபெறும் இந்த ராணுவ கமாண்டர்கள் மாநாடு இன்று தொடங்கி 22ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந் நிலையில் ராணுவ தளபதி எம்.எம்.நரவானே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் எல்லையில் நிலவும் நிலைமை, அச்சுறுத்தல்கள் போன்றவை குறித்து கமாண்டர்களிடம் ஆலோசனை நடத்தி கேட்டறிவார் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் எல்லை பிரச்சினைகளில் மேலும் கவனம் செலுத்தி இராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்கான ஆலோசனையும் நடைபெறும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்த மாநாட்டில் எல்லையில் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சனை, உள்நாட்டு உற்பத்தி தளவாடங்களை நவீனப்படுத்துதல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும் உக்ரைன், ரஷ்யா இடையேயான போரின் தாக்கம் குறித்தும் ராணுவ கமாண்டர்கள் மாநாட்டில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.