மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள மேல கடையநல்லூரில் பைனான்ஸ் அதிபரான மாரிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே மாதவன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மாரிசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் அருகில் உள்ளவர்களின் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாரிசாமி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.