வெயில் காரணமாக மயங்கி விழுந்த மயிலை விவசாயி வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் ஒரு ஆண் மயில் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் கடும் வெயில் காரணமாக திடீரென அந்த மயில் மயங்கி விழுந்தது. இதனை பார்த்த தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து மயிலை கடிக்க முயன்றது. அப்போது அவ்வழியாக சென்ற விவசாயியான கலைவாணன் என்பவர் தெருநாய்களிடம் இருந்து மயிலை பத்திரமாக மீட்டார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த மயிலை பத்திரமாக பெற்று சென்றனர்.