வாலிபர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலவயல் மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று காணாமல் போனது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் வாலிபர்கள் சிலர் காளையை பொன்னமராவதி அருகே மூலங்குடி செட்டிச்சி ஊரணி அருகே தேடிக் கொண்டிருந்தனர். அப்போது வேப்பமரத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் தூக்கில் தொங்கியபடி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழவழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கூலி தொழிலாளியான இளையராஜா என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு இளையராஜா 2 முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.