Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!!!!

அரியலூர் மாவட்டத்தில் இன்று  கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

அரியலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் 250 வருடங்கள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள பெருமாள் கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ராமநவமியன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த நிலையில் இன்று  வரத பெருமாள் கோவிலில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு திங்கட்கிழமை அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி இந்த உள்ளூர் விடுமுறை அரியலூர்  மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும். மேலும் இந்த விடுமுறை பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வர்களுக்கு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.

அவை  ஏற்கனவே அரசால் திட்டமிடப்பட்ட அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளூர் விடுமுறை இன்று  அளிக்கப்படுவதால் அதனை ஈடு செய்யும் விதம் அடுத்த மாதம் ஏழாம் தேதி அன்று முழு  வேலை நாள்  உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் உள்ளூர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு வேலைகளில் எந்த இடையூறு இல்லாத வண்ணம், குறைந்த பணியாளர்களைக் கொண்டும் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |