Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பிரண்டைத் துவைல்ல இத்தனை விஷயம் இருக்கா? தெரியாம போச்சே!!….

வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறான்”என்ற பழமொழிக்கேற்ப நம் அருகிலிருக்கும் மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறியாமல் கண் இருந்தும் குருடாய் அழைக்கிறோம்!!!.

பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, என உள்ளது பிரண்டை சதுரப்பிரண்டை, களிப் பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளது. முப்பிரண்டை கிடைப்பது அரிது. இது ஒரு காயகல்பம் இதன் தண்டு, வேர் ,பழம், அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. சிலர் உடல் மெலிந்து காணப்படுவார்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வரலாம். இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும் உடல் நலம் உண்டாகும் வாய்வு தொல்லை மட்டும் வாய்வு தொல்லை மட்டுப்படும் மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறிவிடும் .  மூல நோய்களால் ஏற்பட்ட புண்கள் குணமாகும் வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறுகளை நீக்கும் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டவும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு பொழுதுஎலும்பு முறிவால் ஏற்படும் வலி வீக்கம் குணமாகும்.

உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்துவிடும். எலும்புகள் பலம் பெறும் ரத்தக்குழாயில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும் இதனால் இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்வது தடைபடும் .இத்தகைய நோய்க்கு பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும் .இதயம் பலப்படும் பெண்களுக்கு சூதக வலியின்போது ஏற்படும் முதுகு வலி இடுப்புவலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும். உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்

 

Categories

Tech |