தமிழக முதல்வர் விவசாயிகளுடன் காணொலிக்காட்சி மூலமாக உரையாடினார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் வைத்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுடன் காணொலிக் காட்சி மூலமாக உரையாடினார். இந்த நிகழ்ச்சியானது குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியில் இருக்கும் ஞானதாசன் மாடரேட்டர் பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், விஜய் வசந்த் எம்.பி, பிரின்ஸ் எம்.எல்.ஏ, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விவசாயிகளுடன் உரையாடினார். அதன்பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் மின்சார வாரியத்தில் பணியில் இருக்கும்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும் என கூறினார்.
இதனையடுத்து அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார். அவர் தமிழ் நாட்டில் முதல் முறையாக 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்திற்காக குமரியில் 1.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 301 பேர் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டம் வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, மாநில அளவில் உற்பத்தி பெருகவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு தொழிற்கருவிகள் வழங்குதல், நலத்திட்ட உதவிகள், மானியம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சட்டசபையில் தனி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து துறைவாரியாக மாவட்டத்தில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து அறிக்கை தயார் செய்யப்படும். அதன்பிறகு ஒவ்வொரு திட்டங்களும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என அமைச்சர் கூறினார்.