Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நீ இல்லாம நான் வாழ மாட்டேன்” பெண் எடுத்த விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கணவன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவைக்காவூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லீனா  என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் லீனாவுக்கும் சின்னராஜா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் சின்னராஜா 45 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு  காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த லீனா கடந்த 13-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த லீனாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று லீனா  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்த  தனபால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |