Categories
மாநில செய்திகள்

15 மாவட்ட மக்களே அலெர்ட்….! இன்றும் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மழை அதிகமான அளவு பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்றும்  கனமழைக்கு வாய்ப்பு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தி. மலை,கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டையில் கனமழைக்கும், விருதுநகர், தேனி, தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Categories

Tech |