Categories
உலகசெய்திகள்

அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள்…. வெற்றிகரமாக விண்ணில் ஏவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்….!!

எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உளவு செயற்கைக் கோள் ஒன்றை பால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

எலான் மஸ்க்கிற்கு ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம் உள்ளது. அங்கு வணிக ரீதியிலும், தங்களது சொந்த ஆராய்ச்சிக்காகவும் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வருகிறது.

அதன்படி பால்கன் 9 ராக்கெட்டின் மூலம் அந்நிறுவனம் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான உளவு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோள் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள வாண்டன்பெர்க் விண்வெளி தளத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது.

Categories

Tech |