Categories
அரசியல்

குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் பயிலும் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை பெற மாணவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.நடப்பு நிதி ஆண்டில் 250 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெறலாம்,

1) http://httpscholarships.gov.in என்கிற தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்பிக்கலாம்.

2) ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்ப முறையில் தங்களுடைய சேமிப்பு கணக்கானது தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளைப் பெற்று இருக்கவேண்டும்.

3)விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைந்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உடையவராக கருதப்படுவர்.

4) இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி நிதி உதவி தொகை பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

5) கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் http://httpscholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் முதலில் பதிவு செய்தல் வேண்டும்.

6) வகுப்பு 1 முதல் 10 வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 15 2001 மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 30 2011

Categories

Tech |