Categories
மாநில செய்திகள்

ஏழை மாணவர்களுக்கு அரசே கட்டணம் செலுத்தும்…? அமைச்சர் சொன்ன தகவல்…!!!!!

இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்த இருக்கிறது. இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளியாகியது. இதையடுத்து தேர்வுக்கான விண்ணப்பபதிவு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 13 ஆம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துவரும் நிலையில், டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்துள்ள நிலையில், காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி ஏழை மாணவர்களுக்கு அரசே கட்டணம் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |