Categories
மாநில செய்திகள்

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ் அறிஞருமான கண.சிற்சபேசன் மரணம்…. பெரும் சோகம்…!!!

பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழ் அறிஞருமான கண.சிற்சபேசன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். 1934ஆம் ஆண்டு தேவகோட்டையில் பிறந்த இவர், தமிழாசிரியராக அரசு பள்ளியில் பணியாற்றினார். சென்னை திருவான்மியூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியபோது நீதிபதி லட்சுமணன், சாலமன் பாப்பையா, முன்னாள் அமைச்சர்கள் காளிமுத்து, தமிழ்குடிமகன் ஆகியோர் இவரது மாணவர்களாக திகழ்ந்தனர். சிறந்த நகைச்சுவை பேச்சாளராகவும் சிந்தனையாளராகவும்.

இவருக்கு கிருபானந்த வாரியார் நகைச்சுவை இமயம் என பட்டம் அளித்தார். இவர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கம்பன் விருது கொடுக்கப்பட்டது. இவரின் இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது. இதையடுத்து இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |