Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கலெக்டர் குடியிருப்பில் புகுந்த சிறுத்தை…. பீதியில் மக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!!

மாவட்ட ஆட்சியர் குடியிருப்பில் சிறுத்தை புகுந்தத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் நிறைந்திருப்பதால் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இங்கு தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் பகுதிக்குள் வரத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஊட்டியில் உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு அமைந்துள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சி பதிவாகி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வனத்துறையினர் அப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |