Categories
மாநில செய்திகள்

பஞ்சாயத்து ராஜ் தினம்…. 24 ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம்…. வெளியான அறிவிப்பு…!!!!!!!

பஞ்சாயத்து ராஜ் தினத்தைமுன்னிட்டு  தமிழகம் முழுவதும் 24-ந் தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது.

குடியரசு தினம், தொழிலாளர்கள் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் தமிழகத்தில் கிராமசபை கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். இந்த கூட்டத்தில் அந்த கிராமத்தில் செயல்படுத்தப்பட்டிருக்கின்ற திட்டங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்படும் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும். மேலும் இந்த கூட்டத்தில் கிராம மக்களிடமிருந்து ஊரக வளர்ச்சித் துறை குறித்து குறை, நிறைகள் கேட்கப்படும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிப்பார்கள்.

மேலும் இதுபோன்ற கிராம சபை கூட்டங்கள் வழியாக தமிழக அரசும்,  ஊரக வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் கிராமசபை கூட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. தற்போது உள்ளாட்சி தேர்தல்கள் முடிந்து பெரும்பாலான இடங்களில் பஞ்சாயத்து தலைவர்கள் பதவியேற்றிருக்கின்றனர். இந்நிலையில், 12, 524 பஞ்சாயத்துக்களிலும் வரும் 24-ந்தேதி கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் பிரவீன் பி.நாயர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தக் கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கவும் உறுதிமொழி எடுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இந்த கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டதற்கான விவரங்களை மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கிராமசபை கூட்டம் நடத்துவது தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி அனைத்து ஊராட்சிகளிலும் ஏப்ரல் 24ஆம் தேதி கிராம சபை கூட்டத்தை நல்ல முறையில் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டம் நடைபெற்றமைக்கான அறிக்கையினை தொடர்புடைய கிராம ஊராட்சிகளிடமிருந்து பெற்று  இந்த இயக்கத்திற்கு 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |