Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதி இன்றி வீட்டில் வழிபாட்டுக் கூட்டம்… எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டம்…!!!

வேடசந்தூரில் வழிபாட்டுக் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் ஒரு வீட்டில் வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதை அறிந்து இந்து முன்னணியினர் ஒன்று திரண்டு வந்து வழிபாட்டு கூட்டத்தை அனுமதியின்றி நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அந்த வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இத்தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்கள். இதனையடுத்து போலீஸ் துணை சுப்பிரண்டு மகேஷ் இருதரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வழிபாட்டு கூட்டத்தை உரிய அனுமதி பெற்ற பிறகே நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்பின் இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |