நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனுப்பி வைக்க கவர்னர் ஆர்.என். ரவி முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவில்லை என கூறி, கவர்னர் ஆர்.என். ரவியின் தேநீர் விருந்தை தமிழக அரசு, தி.மு.க .கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் புறக்கத்துள்ளன. இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு மசோதாவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்க்கு அனுப்பி வைக்க கவர்னர் ஆர்.என். ரவி முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
நீட் தேர்வு மசோதாவை தொடர்பான தனது பரிசீலனை மற்றும் குறிப்பேடு பணிகள் முடிவு பெற்று இருப்பதால் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக விவரங்களை முறைப்படி முதலமைச்சரின் அலுவலகத்திற்கு தெரிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதால் கவர்னருக்கும், அரசுக்கும் உள்ள மோதல் போக்கு குறையும் என கூறப்படுகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பேரவையில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.