Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீ பற்றினால் என்ன செய்யனும்?…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு துறை…!!

திண்டுக்கல்லில் தீயணைப்பு துறை சார்பாக தீ விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை தீயணைப்பு துறை சார்பாக தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் தீ விபத்து ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்துகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை தீயணைப்பு படை வீரர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் திண்டுக்கல் அருகில் ஓடைப்பட்டி கிராமத்தில் திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜூ தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் பொதுமக்களுக்கு தீ விபத்து குறித்தும், தீ விபத்து ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

அதில் சமையல் கேஸ் சிலிண்டரில் தீப்பற்றினால் எப்படி அணைக்க வேண்டும் என்பதையும், தீ விபத்தில் சிக்கியவர்களை எப்படியெல்லாம் மீட்க்கலாம் என்று பொதுமக்களுக்கு விளக்கம் கொடுத்தனர். மேலும் தீத்தடுப்பு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு  கொடுத்தனர்.

Categories

Tech |