இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி பங்கு கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அது மட்டுமல்லாமல் அவர்களது படகு உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
இந்நிலையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 19 மீனவர்களும் இலங்கை கடற்படையினால் அத்துமீறி கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.