உக்ரைன் மீதான தன் படையெடுப்புக்கு பேரழிவுகரமான முடிவைக் கொண்டு வருவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயாராக இருக்கிறது என அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகநாடுகள் கதிரியக்க எதிர்ப்பு மருந்துகளை சேமித்து வைப்பதுடன் விமானத் தாக்குதல் முகாம்களை உருவாக்க வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைன் போர் நீடித்து வந்தாலும் கடும் பின்னடைவை ரஷ்யா எதிர்கொள்ளும் சூழ்நிலையில், போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்க மாட்டார் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ரஷ்ய போர்க் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதற்கு பதிலடியாக ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது கடும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. ரஷ்யா நெருக்கடியை சமாளிப்பதற்கு அணு ஆயுதத்தை பயன்படுத்தும் சூழல் உருவாகும் என்றும் அதற்கும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.