சென்னையில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்து வருகின்றது. திங்கட்கிழமை காலை நிலவரப்படி 99 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் ஒருசில எண்ணிக்கைகளை அதிகரித்தாலும் பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என கூறப்படுகிறது. சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் திருவெற்றியூர், மணலி, மாதவரம் போன்ற மண்டலங்களில் பாதிப்பு இல்லை.
மேலும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், ஓற்றை இலகத்திலேயே பாதிப்பு இருக்கிறது. இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய பாதிப்பு ஏப்ரல் 11ஆம் தேதி ஏறுமுகத்தில் மாறி இருக்கிறது. இது அதிகப்படியான பாதிப்பாக இல்லாவிட்டாலும் நாள்தோறும் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால் சென்னை மக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது எனக் கூறப்படுகிறது.
சென்னையில் கொரோனா பாதிப்பு நிலவரம்,
17 ஏப்ரல் : 19
16 ஏப்ரல்: 12
15 ஏப்ரல்: 12
14 ஏப்ரல்: 08
13 ஏப்ரல்: 10
12 ஏப்ரல்: 09
11 ஏப்ரல்: 10
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மாலையுடன் நிறைவடைந்து 24 மணி நேரத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நலத் துறை வெளியிட்டுள்ளது. அதில் நேற்று 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இதுவரை கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 34,53,263 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவரின் எண்ணிக்கை 34,15,007 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 14,477 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது நிலவரப்படி 737 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர் என மக்கள் நலவாழ்வு துறை தெரிவித்துள்ளது.