உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டத்தில் சென்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார். பிரக்யராஜை சேர்ந்த காஜல் என்ற சிறுமி பல்வேறு ஓட்டப் பந்தயங்களில் கொள்வது மட்டுமல்லாமல் மாரத்தான் போட்டி களிலும் பங்கேற்பார். தடகள வீராங்கனையாக வேண்டும் என்ற கனவை கொண்ட அந்த சிறுமி சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்தை 5 நாட்களில் கடந்து மாநில தலைநகர் லக்னோவில் சென்றடைந்தார்.
அங்கு சென்ற முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். இதையடுத்து தன்னை சந்திக்க வந்த சிறுமிக்கு முதல்வர், ஷு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை வழங்கினார். இதையடுத்து அந்த சிறுமிக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்,