Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் ரத்து….. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டத்தில் காரை மோத விட்டு கொலை செய்ததாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீன் வழங்கியது.இதனை எதிர்த்து உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் நிலைமையை சரியாக கவனிக்காமல் ஜாமின் வழங்கியுள்ளதாக உச்சநீதிமன்றம் சாடியுள்ளது. இதையடுத்து ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் அடுத்த ஒரு வாரத்திற்குள் சிறைக்குச் சென்ற சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |