Categories
தேசிய செய்திகள்

அசாமில் புயல், மின்னல் தாக்குதல்….. 3 ஆயிரம் வீடுகள் சேதம்…. 20 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!

அசாம் மாநிலம், முழுவதும் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து புயல் மற்றும் இடி மின்னல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை கழகத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்ததாவது: “கடந்த 14ம் தேதி முதல் மூன்று நாட்களில் 1410 கிராமங்களில், 22 மாவட்டங்களில் புயல் மற்றும் இடி மின்னல் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த தாக்குதலில் 95 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 333 இடங்களில் பயிரிட்டு இருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

புயலைத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அசாமில் வீடு, பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு தனியார் கட்டிடங்களிலும் மழைநீர் புகுந்து சேதமடைந்துள்ளன. மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தது. புயலுக்கு பல மாவட்டங்களில் 8 பேர் பலியாகியிருந்தனர். மேலும் நேற்று 6 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. அசாமில் ஏற்பட்ட சேத விவரங்களை ஆய்வு செய்ய வட்ட அளவிலான குழுக்களை அரசு அமைத்துள்ளது. இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சரிபார்க்கப்பட்டு நிதி உதவி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |