பெரிய அளவிலான கோப்புகளை அனுப்ப பயன்படுத்தப்படும் டெலிகிராம் ஆப் பல புதிய அப்டேட்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நோட்டிபிகேஷன் டோன், கான்வர்சேஷன் ம்யூட் செய்ய கஷ்டம் டைமிங், ஆட்டோ டெலிட் மெசேஜ், சிறப்பான பார்வாடிங் மற்றும் பல்வேறு இதர அம்சங்களை வழங்கியுள்ளது. உங்களின் மியூசிக் கலெக்சனில் இருந்து அல்லது வேறு ஏதேனும் சவுண்ட்களை அலர்ட் டோன் ஆக செட் செய்து கொள்ள முடியும்.
குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நோட்டிபிகேஷன்களை வராமல் தடுக்க அவற்றை பாஸ் செய்ய முடியும். ஆட்டோ டெலிட் அம்சத்தை ஏதேனுமொரு காண்டாக்டிற்கு ஆட் செய்ய முடியும். இந்த அம்சத்தை இரண்டு நாட்கள், மூன்று வாரங்கள், நான்கு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலகட்டம் வரை செட் செய்து கொள்ள முடியும். இவ்வாறு பல்வேறு புதிய சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.