Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. புளிய மரத்தின் மீது மோதிய கார் “2 பேர் படுகாயம்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 மரத்தின் மீது கார் மோதிய  விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பூக்கொல்லை பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் சாலை ஓரம் அமைந்துள்ள புளிய மரத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சலாமத்துநிஷா, ஹர்சத்  ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நீடாமங்கலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |