ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாலாப்புரம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ ஓட்டுநரான விஜயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜயன் பாபநாசம் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாகர்கோவிலில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் விஜயன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கும்பகோணம் ரயில்வே காவல்துறையினர் விஜயனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது