Categories
உலக செய்திகள்

அழிவின் விளிம்பில் உக்ரைன்…. வேதனை தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி….!!!!

கிட்டத்தட்ட 7 வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த கொடூர தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,000 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இந்த போரில் எத்தனை பேர் உயிர் பிழைப்பார்கள் ? என்று கூறுவது கடினம் என்று வேதனை தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகரில் இருந்து வாபஸ் பெறப்பட்ட பிறகு அந்த பகுதிக்கு உக்ரைனிய அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள பல பகுதிகளில் 900க்கும் மேற்பட்ட மக்களின் உடல்கள் கிடந்துள்ளன.

Categories

Tech |