Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பிரபல இயக்குனருடன் கைக்கோர்த்த சித்தார்த்…. அடுத்த படம்… வெளியான அறிவிப்பு…!!!!!!!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகராக திகழ்பவர் சித்தார்த். உதவி இயக்குனராக தன் திரைப் பயணத்தை தொடங்கிய சித்தார்த் பாய்ஸ் படத்தின் மூலமாக நாயகனாக  அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல தரமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அவரின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ETAKI ENTERTAINMENT தயாரிப்பு நிறுவனம் சார்பில் சித்தார்த் மற்றும் S .Uஅருண் குமார் இணையும் படத்தை பற்றிய அறிவிப்பு இன்று சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

அவர்கள் வெளியிட்ட அறிக்கை என்னவென்றால் கடந்த 10 ஆண்டுகளில் ETAKI ENTERTAINMENT சர்வதேச தரத்திலான அசல் படைப்புகளை உருவாக்கும் நோக்கில் உறுதியாக செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில் காதலில் சொதப்புவது எப்படி, ஜில் ஜங் ஜக் மற்றும் அவள் போன்ற படப்பிடிப்புகளில் மூலமாக தகுதியானவர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்கி வருகின்றது. இன்று எங்கள் நட்சத்திரம் சித்தார்த்தின் பிறந்தநாளை மகிழ்ச்சியாக சந்தர்ப்பத்தில் எங்கள் அடுத்த திரைப்படத்தை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.எங்கள் “தயாரிப்பு எண். 4” (தற்போதைய தலைப்பு) இரண்டு நம்பமுடியாத திறமைகளை ஒன்றிணைக்க இருக்கிறது.

திறமையான மற்றும் உணர்ச்சிகரமான கதைசொல்லி S.U.அருண் குமார் (பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி) பன்முகத் திறமையும் தனித்துவமான நடிகருமான சித்தார்த்துடன் இணைந்து ஒரு முக்கியமான படைப்பை தர இருக்கிறார். இது உலகளாவிய பார்வையாளர்களை கவரும் ஒரு அருமையான கிளாசிக் சினிமாவாக இருக்குமென நம்புகிறோம்.எங்களின் புதிய முயற்சியான இந்த படைப்பு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும். சத்தியும், கருணையும் கொண்ட எங்களின் தெய்வமான முருகப் பெருமானின் ஆசீர்வாதத்தோடு எங்கள் கதை அமைந்திருக்கும். இளம் நடிகர்கள் மற்றும்விவரங்கள், எங்களின் மதிப்புமிக்க வெளியீட்டு கூட்டணியாளர்கள் மற்றும் எங்களின் பட வெளியீட்டு போன்ற  விவரங்களை விரைவில் பகிர்வோம்.

திரைப்பட ஆர்வலர்களின் அன்பையும், ஆதரவையும் வேண்டுகிறோம். மேலும் இந்திய முக்கிய படைப்பை விரைவில் உங்களுக்கு காண்பிக்க ஆவலுடன் இருக்கிறோம். எப்போதும் ஆதரவு அளித்து வரும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு நன்றி மற்றும் இந்த பயணத்தில் அவர்களின் உற்சாகமான ஆதரவு எப்போதும் போல எதிர்பார்க்கிறோம் என அவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் சொதப்புவது எப்படி, ஜில் ஜங் ஜக், அவள் போன்ற படங்களின் வரிசையில் மேலும் ஒரு தரமான படத்தை கொடுப்பார்கள் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |