Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பலத்த கனமழை…. 500 வாழைகள் சாய்ந்தது…. விவசாயி கவலை…!!!

கலிங்கப்பட்டியில் பெய்த கனமழையால் 500 வாழைகள் அடியோடு சாய்ந்துள்ளது.

தமிழகத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் அருகில் கலிங்கப்பட்டி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த கனமழை பெய்தது.

இந்த கனமழையால் கலிங்கப்பட்டியில் வசித்து வந்த விவசாயி நிறைபாண்டி என்பவர் பயிரிட்டு இருந்த 500க்கும் அதிகமான வாழைகள் அடியோடு சாய்ந்தது. இதனால் விவசாயி மிகுந்த கவலை அடைந்தார். இதை தொடர்ந்து பல்வேறு வீடுகளில் டி.வி.கள் மின்விசிறிகள் உள்ளிட்ட பல பொருட்களும் சேதமடைந்துள்ளது. இந்த கனமழையால் அ.கரிசல்குளம் பகுதியில் சிறிய கண்மாய், பெரிய கண்மாய் மீண்டும் தனது கொள்ளளவை எட்டியுள்ளது.

Categories

Tech |