Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இவர்கள்தான் அதில் கலந்து கொள்வார்கள்” நடைபெற்ற கபடி போட்டி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் கபடி கழக நிர்வாகி கோபாலன், காளிதாஸ், ராமச்சந்திரன், மாவட்ட  அமெச்சூர்  கபடி கழக தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் கலையரசன், அமைப்பு செயலாளர்  பக்கிரிசாமி, பொது செயலாளர் தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில்  நடைபெற்ற  போட்டியில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர்  போட்டியில்  கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து இவர்கள் மாநில அளவில் நடைபெறும்  போட்டியில் பங்கேற்பார்கள் என அமெச்சூர் கபடி கழக  நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |