Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகள்…. பிரசித்தி பெற்ற ஆலயம்….!!!!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பூண்டி மாதா ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி  நடைபெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூண்டிமாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டு நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு திருப்பலி  நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் துணை அதிபர் ரூபன்அந்தோணிராஜ், தியானமைய இயக்குனர் சாம்சன், உதவிப்பங்கு தந்தையர்கள் இனிகோ, ஜான்சன், ஆன்மிக தந்தை அருளானந்தம்,  கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துள்ளனர்.

Categories

Tech |