Categories
தேசிய செய்திகள்

அணை பாதுகாப்பு சட்டத்தில்…. முல்லைப் பெரியாறு அணை…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து சட்டசபையில் அ.தி.மு.க கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. இந்த கவனஈர்ப்பு தீர்மானம் குறித்து நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகன் பதிலளித்து பேசினார். அதாவது அணைபாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இந்த அணைபாதுகாப்பு சட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையும் அடங்கும். மேலும் அணைகளின் நீர் இருப்பு, வெளியேற்றம் உள்ளிட்டவைகூட அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருகிறது. அனைத்து அணைகளும் பாதுகாப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டு தான் ஆகவேண்டும்.

ஏனெனில் பராமரிப்பு பொறுப்பை நம்மிடம் அணைபாதுகாப்பு சட்டம் கொடுத்துள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை. இந்த அணைபாதுகாப்பு சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வர இன்னும் ஒரு ஆண்டு ஆகும். அதுவரையிலும் நாம் காத்திருக்க வேண்டும். முல்லைபெரியாறு அணையை பாதுகாப்பதும், பராமரிப்பதும் தமிழக அரசு தான். எனினும் இருக்மிடம் என்னவோ கேரளா தான். தமிழ்நாடு- கேரளா இணைந்து சூப்பர் வைசர் குழு அமைக்க இருக்கிறது. சட்டவல்லூநர்களுடன் ஆராய்ந்த பிறகு வேறு வழியில்லாமல் இதில் சேர்ந்துள்ளோம். இது தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு மேற்கொள்ளப்படும்” என்று அவர் பேசினார்.

Categories

Tech |