“கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்” என யுவன்ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டாவில் பகிர்ந்த போஸ்ட் வைரலாகிவருகிறது.
‘கருப்பு திராவிடன் பெருமைக்குரிய தமிழன்’ என்ற வாசகத்துடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடற்கரையில் கருப்பு நிற டீசர்ட் அணிந்து நிற்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவரது மகன் யுவன்சங்கர் ராஜா இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தி தெரியாது போட என்று சில நாட்களுக்கு முன்பு அவர் அணிந்திருந்த டி-ஷர்ட் பெறும் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் கருப்பு நிற டீசர்ட், வேட்டி அணிந்து நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘Dark Dravidan. Proud Tamizhan ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.