லாரி மீது கார் பயங்கராமாக மோதி பெண் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து டிரைவரான ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி கோகிலவாணி(52), மகள் காயத்ரி(35), பேரன் சர்வேஷ்(6) ஆகியோருடன் மதுரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு நடைபெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு காரில் மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அந்த கார் நாமக்கல் மாவட்டம் முதலைபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுபாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் கோகிலவாணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ராஜேந்திரன், காயத்ரி, சர்வேஷ் ஆகிய 3 பேர் பலத்தகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறனர்.