பாப்புலர் பிரண்ட் ஆப் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் வைத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் நஸ்ரத் பேகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் குஜராத், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, ஆகிய மாநிலங்களில் ராமநவமியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் நஸ்ரின் பர்வின், வடக்கு மாவட்ட தலைவர் குலாம் உசேன், மாவட்ட தலைவர் பாப்புலர் பிரண்ட் தஸ்லிமா, மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது பாரூக், தேசிய செயற்குழுஉறுப்பினர் முஹம்மது ஹாலித், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.