மரியுபோல் நகரின் பெரும் பகுதியை ரஷ்யபடைகள் கைப்பற்றிய சூழ்நிலையில், மீதமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் நகரை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர். ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள கிரீமியா பகுதியையும், ரஷ்ய ஆதரவு போராளிக் குழுவினர் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியையும் மரியுபோல் நகரம் இணைப்பதால் அதனை கைப்பற்ற ரஷ்யபடைகள் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனிடையில் ரஷ்யப்படைகள் மேற்கொண்டு வரும் தாக்குதலால் திரும்பிய இடமெல்லாம் சிதிலமடைந்த கட்டிடங்களும், இறந்தவர்களின் சடலங்களுக்கு காணப்படுகிறது. மரியுபோல் நகரத்தில் மட்டும் உக்ரைன் ராணுவத்தினர் 4,000 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.